கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த யாழ். நபர் - மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (காணொளி)

Jaffna Sri Lankan Peoples Death
By Kiruththikan Nov 25, 2022 05:40 AM GMT
Report

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார்.

இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, யோசிக்க வேண்டாம், நான் அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று. இதை தான் கடைசியாக கூறினார்.

அதன் பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தான் நான் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார். 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026