கசிந்த ஜன நாயகன் - பின்னணியில் படக்குழு..! திட்டமிட்ட சதி - மௌனம் காக்கும் விஜய்

Vijay Cinema Lead Tamils Cinema Update
By Independent Writer Apr 11, 2026 06:35 AM GMT
Report

தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் முழுமையாகக் கசிந்துள்ளமை திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் தணிக்கை குழுவிடம் வழங்கப்பட்ட பிரதி அல்ல என்றும், படக்குழுவின் மிக முக்கியமான நபர்களின் பார்வைக்காக உருவாக்கப்பட்ட 'எடிட் ரெபரன்ஸ்' (Edit Reference) பிரதியே கசிந்துள்ளதாகவும் இயக்குனர் மைக்கேல் அருண் தெரிவித்துள்ளார்.

இது படக்குழுவினரின் அஜாக்ரதையாலேயே நிகழ்ந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர் - வார ராசிபலன்

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர் - வார ராசிபலன்

விஜய்க்கு அழுத்தம் 

திரைப்படத்தின் காட்சிகள் வெளியானது தொடர்பாக திரையுலகத்தினர் பலரும் தங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கசிந்த ஜன நாயகன் - பின்னணியில் படக்குழு..! திட்டமிட்ட சதி - மௌனம் காக்கும் விஜய் | Vijay Jana Nayagan Leaked Online In Hd Quality

படத்தை சட்டவிரோதமாகப் பகிர்பவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) எச்சரித்துள்ளது.

திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "விஜய்க்கு அழுத்தம் கொடுக்கவே" திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டதாக த.வெ.க.வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் திரைப்பட காட்சிகள் கசிவை அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது என திமுகவின் கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவுப்பேரவை துணைத் தலைவர் போஸ் வெங்கட் கேட்டுக் கொண்டுள்ளார்.

யார் இதனை செய்து இருந்தாலும் கடுமையான தண்டனை தர வேண்டும். தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும்" என போஸ் வெங்கட்  கூறியுள்ளார்.

மட்டக்குளியில் கோர விபத்து - பலிபோன 10 வயது மாணவியின் உயிர்

மட்டக்குளியில் கோர விபத்து - பலிபோன 10 வயது மாணவியின் உயிர்

திருட்டுத்தனமாகத் திரைப்படம்    

400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்ட இத்திரைப்படம் இவ்வாறு கசிந்தமை தயாரிப்பாளருக்குப் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கவலை வெளியிட்டுள்ளார்.

கசிந்த ஜன நாயகன் - பின்னணியில் படக்குழு..! திட்டமிட்ட சதி - மௌனம் காக்கும் விஜய் | Vijay Jana Nayagan Leaked Online In Hd Quality

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் "கசிந்தது" காரணமாக தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில்," ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையினால் உருவாக்கப்படுகிறது - தயவுசெய்து திருட்டுத்தனமாகத் திரைப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்" என்று கூறியுள்ளார்.  

இணையத்தில் கசிந்த

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கட்சிகள் இணையத்தில் கசிந்தமை தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.

திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.   

ஜன நாயகன் திரைப்படத்தை 2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் திகதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்னைகளால் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானமை குறிப்பிடத்தக்கது.  

 

பாடசாலைச் சீருடை விநியோகம்...! கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைச் சீருடை விநியோகம்...! கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026