மட்டக்குளியில் கோர விபத்து - பலிபோன 10 வயது மாணவியின் உயிர்
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10.04.2026) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேருந்தில் மோதி விபத்து
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவியை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியை மட்டக்குளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |