நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ஜீவன் தொண்டமான் வாழ்த்து

Vijay Ceylon Workers Congress Sri Lanka Jeevan Thondaman India
By Shadhu Shanker Feb 02, 2024 02:21 PM GMT
Report

“ சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது, 

“நடிகர் விஜய் சினிமா துறையில் உச்சம் தொட்டவர். அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியென இரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு சினிமாத்துறையில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நடத்துகொண்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

தமிழக வெற்றி கழகம்

அதுமட்டுமல்ல தனக்காக உருவான ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் ஊடாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ஜீவன் தொண்டமான் வாழ்த்து | Vijay Tamilaga Vetri Kalagam Jeevan Thondaman Tvk

இந்நிலையில் அப்பணிகளை மென்மேலும் முன்னெடுப்பதற்காகவும், சமத்துவம், சமூக நீதிக்காகவும் விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றி கழகமாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

சினிமாவில் உள்ள செல்வாக்கை மட்டும் பயன்படுத்தி எடுத்தோம், கவிழ்த்தோம் என அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல் நன்கு திட்டமிடலுடன் அப்பயணத்தை விஜய் ஆரம்பித்துள்ளார் என்பது அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் உறுதியாகின்றது.

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

ஜீவன் வாழ்த்து

நல்லாட்சி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை மையப்படுத்தியமாக அரசியல் பயணம் அமையும் என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம். இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு சமத்துவம், சமூக நீதியை வலியுறுத்தியே எமது அரசியல் பயணமும் தொடர்கின்றது.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ஜீவன் தொண்டமான் வாழ்த்து | Vijay Tamilaga Vetri Kalagam Jeevan Thondaman Tvk

அந்தவகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான பயணத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் வெற்றியளிக்க மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் இணைந்து பயணிக்கவும், புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய இடங்களில் புரிந்துணர்வுடன் செயற்படவும் நாம் தயாராகவே இருக்கின்றோம் என்ற செய்தியையும் விஜய்க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.” – என்றார்.

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்! சற்றுமுன் பதிவிட்ட பதிவு

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்! சற்றுமுன் பதிவிட்ட பதிவு

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026