வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்
தமிழ்நாடு முழுக்க உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்இ வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கை பதிவூ செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
பந்தல் சரிந்து விழுந்து
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை விஜய் காண்பித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய் அங்கிருந்த முதியவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Vijay, TVK chief and candidate from Tiruchirappalli East and Perambur constituencies, arrives at a polling station in Chennai to cast his vote. pic.twitter.com/VYZ33KXHLE
— ANI (@ANI) April 23, 2026
இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்த போது போடப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் 233 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இந்த தேர்தலில் அஜித், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், கருணாஸ், சிவகார்த்திகேயன், சீமான் உள்ளிட்டோர் வாக்கு அளித்துள்ளனர்.
அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் காலையிலேயே வாக்களிக்க சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்! 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |