சட்டத்திற்கு அடிபணிந்த விஜய்: விசாரணைக்கு தயாரான புலனாய்வு குழு!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்புக்கு, கட்சித் தலைவர் விஜய் பயணித்த பரப்புரை வாகனத்தின் சிசிரிவி காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைக்க விஜய் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தின் சிசிரிவி காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
வழக்குப் பதிவு
இந்நிலையில், விஜய் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, நேற்று குறித்த மனு மீதான விசாரணையின் போது, கட்சித் தலைவர் விஜய் பயணித்த பரப்புரை வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக காணொளிகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா எனவும் குறித்த பரப்புரை வாகனத்தை செலுத்திய சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
