விரைவில் கிடைக்கவுள்ள அரச வேலைவாய்ப்பு! வெளியான அறிவிப்பு
இலங்கையில் வெற்றிடமாகவுள்ள கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்திஸ்யோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்களென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகஸ்த்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருகின்றது.
வேலைத்திட்டம்
இந்நிலையில் குறித்த உத்தியோகஸ்த்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் முன்னோக்கிச் சென்றால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் சிறந்த நாட்டை உருவாக்க முடியும்.
உத்தியோகஸ்த்தர்கள்
அத்துடன் கிராம சேவை உத்தியோகஸ்த்தர்களின் பிரதான பிரச்சினையான கிராம அதிகாரிகள் யாப்பு உருவாக்கப்பட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இருப்பினும் இந்த பிரச்சினையில் விரைவில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |