13 ஆவது திருத்தம் -ரணிலின் முயற்சியை தோற்கடிக்க விமல் வீரவன்ச கங்கணம்
அக்கிராசன உரை ஊடாக நாடாளுமன்ற அமர்வுகளை காலந்தாழ்த்த முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான அடிப்படை ஒன்றை அக்கிராசன உரை ஊடாக ஏற்படுத்திக்கொள்ளவே அதிபர் ரணில் பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடல்ல; மாறாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை அக்கிராசன உரையூடாக அதிபர் வெளிப்படுத்த பார்க்கிறார். இது தொடர்பில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
ரணிலின் முயற்சியை எவ்வாறு தோற்கடிப்பது
ரணிலின் முயற்சியை எவ்வாறு தோற்கடிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம் எனவும் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். சில கட்சிகள் நேரடியாக இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
தேர்தல் நடப்பதுபோல தெரியவில்லை
சிறி லங்கா பொதுஜன பெரமுனவினரின் செயற்பாடுகளை பார்த்தால் தேர்தல் நடப்பதுபோல தெரியவில்லை. தேர்தலை நடத்துவதற்கு நிதியில்லை என நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
13ஆவது திருத்தச்
சட்டத்தின் ஊடாக
மாகாண சபைகள்
ஏற்படுத்தப்பட்டமைக்கு
ஆதரவளித்த மக்களையே
மக்கள் விடுதலை
முன்னணியினர்
கொன்றொழித்தனர்.
இவ்வாறான நிலையில்
இப்போது 13ஆவது
திருத்தச் சட்டம் சரியென
அவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் 13இக்கு
ஆதரவளித்தவர்களை
கொன்றது தவறென மக்கள்
விடுதலை முன்னணி கூற
வேண்டும் என்றார்.
