கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பெறுப்பேற்றுள்ள விமல்ராஜ்
“கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பெறுப்பேற்றுள்ள எனக்கு பல அச்சுறுத்தல்கள் காணப்பட்டது. இருந்தபோதும் அரசியல் இலாபங்களுக்காக என் மீது வீண்பழி சுமத்தியவர்களுக்கு இன்றைய நாள் ஒரு பதிலடியான நாள்” என கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ள விமல்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கச்சேரியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றிய விமலராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதன் காரணமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அவர் அதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் குறற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு மீண்டும் பதவியை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய தனது கடமையை நேற்று(10) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாகப் பெறுப்பேற்றார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்
காணி சீர்திருத்த ஆணைக்குழு

''கடந்த 12 வருடங்களுக்கு மேலாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட கடமையை இதுவரை சரியாக செய்துள்ளேன்.
இருந்தபோதும் பல சொல்லெண்ணா துயரங்களைச் சந்தித்தேன். எனக்கு எதிராகப் பல போலியான குற்றச்சாட்டுக்களை சில அரசியல்வாதிகள் தங்களது வரப்பிரசாரத்தைப் பயன்படுத்தி முன்வைத்தனர். இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள்.
காணிக்கு உறுதி வழங்குவது, காணி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதற்கான ஒரு சட்ட ஆலோசனைப் பிரிவு உள்ளதுடன் கள உத்தியோகத்தரிடம் தொடங்கி அமைச்சர் வரைக்கும் உள்ள அனைவரது கையொப்பத்துடன் தான் உறுதி வழங்கப்படும்.
ஊடகவியலாளர் மட்டுமல்ல தனி நபருக்கும் எந்த ஒரு காணியும் வழங்க முடியாது, காணி வழங்குவதற்கான சட்டம் இருக்கின்றது. அந்த வகையில், தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கையை விடுத்திருந்தனர்.
சாதகமான தீர்ப்பு

இந்தக் கோரிக்கையையடுத்து அரசாங்க அதிபர் விசேடமாக ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து முறையாக காணிக் கச்சேரியில் வைத்து அதனைத் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி அங்கு சிபார்சு செய்யப்பட்டு அதனடிப்படையில் காணிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினோம்.
இதனை சில அரசியல்வாதிகள் ஊடகவியாலாளர்களுக்கு எந்தவகையில் காணி வழங்கப்பட்டது என தெரிவித்து குற்றச்சாட்டு முன்வைத்தனர், அது முழுமையாகப் பொய்யானது, அதேவேளை வேறு எந்தவொரு ஊடகவியலாளர் சங்கங்களோ காணி தருமாறு கேட்கவில்லை.
எனக்கு எதிராக அரசியல்வாதிகள் முற்றுமுழுதாகப் பயன்படுத்தப்பட்டனர். எந்த இடத்தில் என்மீது வீண்பழி சுமத்தி எனது சேவையை இடைநிறுத்தி முடிவுக்கு கொண்டுவந்து அனுப்பினார்களே அந்த இடத்தில் சேவையாற்ற வேண்டும் என மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் எனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.'' அதற்கமைய மீண்டும் பதவியை பெறுப்பேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 54 நிமிடங்கள் முன்