சுவாமி விபுலானந்தரின் 75 வது ஆண்டு நினைவுதினம் சம்பூரில் (படங்கள்)
உலகின் முதல் தமிழ்த்துறைப்பேராசிரியரான சுவாமி விபுலானந்தரின் 75 வது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் சம்பூர் மகாவித்தியால மாணவர்களின் பங்குபற்றுதல்களுடன் சம்பூர் தமிழ்க்லாமன்றத்தின் தலைவர் செ . திவாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் அசாதாரன சூழ்நிலை காரணமாக சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வின்போது சம்பூரில் நிறுவப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குறித்த திருவுருவச்சிலையானது சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தினரால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவின் நான்காவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக கடந்த ஆண்டு இதே நாளில் சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தினரால் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.






