சச்சின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்த விராட் கோலி
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த சாதனையை இந்நாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் விராட்கோலி முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இன்றையதினம் சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
சச்சினின் சாதனை முறியடிப்பு
இந்த ஆட்டத்தில் கோலி பெற்ற 74 ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார்.
𝐑𝐮𝐧 𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞 🔢
— BCCI (@BCCI) October 25, 2025
Virat Kohli surpassed Kumar Sangakkara in the tally for Most Runs in ODI cricket history 🫡
Scorecard ▶ https://t.co/4oXLzrhGNG#TeamIndia | #3rdODI | #AUSvIND | @imVkohli pic.twitter.com/bf9lnynpn2
இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 18,436 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
குமார் சங்கக்காரவையும் விட்டு வைக்கவில்லை
தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாராவின் சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வருமாறு, விராட் கோலி - 18,443 ஓட்டங்கள் சச்சின் டெண்டுல்கர் - 18,436 ஓட்டங்கள் குமார் சங்கக்கார - 15,616 ஓட்டங்கள் ரோஹித் சர்மா - 15,589 ஓட்டங்கள் மஹேல ஜயவர்தன - 14,143 ஓட்டங்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்