விசா இன்றி விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை - விசேட சுற்றுவளைப்பில் கைது!
Sri Lanka Police
Kalutara
Germany
By pavan
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றில் விசா இன்றி தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்பின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்