கோட்டாபயவின் பயணம் - மாலைதீவு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பு
Gotabaya Rajapaksa
Singapore
Maldives
By Sumithiran
மாலைதீவு அரசின் அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்சவின் மாலைதீவு பயணம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இதன்படி இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் ஒரு போக்குவரத்து பயணத்தை மேற்கொண்ட இலங்கை விமானப்படை விமானம் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் 13 ஜூலை 2022 தரையிறங்குவதற்கு இராஜதந்திர அனுமதியை வழங்கியது.
சிங்கப்பூர் சென்ற கோட்டாபய
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 14 ஜூலை 2022 அன்று சிங்கப்பூர் சென்றார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

