அமெரிக்கா விரையும் இந்திய பிரதமர் மோடி
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) இந்திய (India) பிரதமர் நரந்திர மோடி (Narendra Modi) அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.
அதன் போது, பிரதமர் மோடி 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதானமாக அமெரிக்காவின் (US) வில்மிங்டனில் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குவாட் கூட்டமைப்பின் 4-ஆவது மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்து
அதனை தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் திகதி அவர் இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 23 ஆம் திகதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் இந்திய பிரதமர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |