கணவன், மனைவியை மோதித்தள்ளிய இ.போ.ச!! ஸ்தலத்தில் முறுகல் நிலை ( படங்கள்)
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பருத்தித்துறை பேருந்து, வீதியால் உந்துருளியில் பயணித்த கணவன் மனைவி ஆகியோரை மோதித்தள்ளியுள்ளது.
இதன்போது உந்துருளி பேருந்தின் முன்சக்கரத்திற்குள் புகுந்த நிலையில், காயத்திற்கு உள்ளான இருவரும் மக்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளார்கள்.
56,55 அகவையுடைய பிரமந்தனாறு விசுவமடுவினைச் சேர்ந்த கந்தையா சிவசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம் மேகனாம்பிகா தம்பதிகளே படுகாயமடைந்துள்ளார்கள்.
இந்த விபத்தினை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தே வித்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், பேருந்தின் சாரதி புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்கள் பேருந்தினை எடுக்கவிடாமல் முரண்பட்ட நிலையில் காவல்துறையினர்,மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.



