கறை பூச துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள பகிரங்க சவால்

Batticaloa S. Viyalendiran Shanakiyan Rasamanickam
By Dilakshan Aug 04, 2024 01:56 PM GMT
Report

இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன் மீது கறை பூச துடிப்பதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalanderan) குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளாக  வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவ தினமான அன்று தான் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேளை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாகவும் பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தி வதந்திகளை பரப்பி இதனை வைத்து அரசியல் இலாபம் காண துடித்து வருகின்றதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல்


பகிரங்க சவால்

அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் ஆதரவாளரை கைது செய்த இடத்தில் தான் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் தனது மெய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கறை பூச துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள பகிரங்க சவால் | Viyalanderan Has Blamed Shanakiyan

குறித்த சம்பவத்துடன் தொடர்பு படுத்தி திரிபு படுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன், அந்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மான நஷ்ட ஈடு வழக்கு

இதேவேளை, தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாமல் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்து வரும் சாணக்கியன், தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை என்றும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கறை பூச துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள பகிரங்க சவால் | Viyalanderan Has Blamed Shanakiyan

மேலும், பல தடவைகள் சாணக்கியன் தன்னுடன் நேரடியாகவும் சரி மறைமுகமாகவும் சரி பல சவால்களை விட்டு இருக்கின்றார் என்றும் பொய்யாக வதந்திகளை பரப்பி அதில் அரசியல் இலாபம் காண துடிக்கும் சாணக்கியனுக்கு எதிராக தான் மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026