சிறைப்பிடிக்கப்படும் “ஆபத்தில்” விளாடிமிர் புடின்? வெளியான பகிரங்க எச்சரிக்கை
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரிட்டிஷ் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய அதிபர் இப்போது சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
உக்ரைனில் அல்லது ரஷ்யாவில் செயல்படும் ஒவ்வொரு தளபதியும், சட்டவிரோத உத்தரவுகளை எதிர்கொண்டால், அது பொதுமக்களை குறிவைத்து அல்லது வேறுவிதமாக, தளங்களைத் தாக்கினால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரணை செய்வதை அறிவார்கள்.
சட்டவிரோதமான உத்தரவுகளைப் பின்பற்றினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இறுதியில் சிறையில் முடிவடையும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.