ஈரானுடனான புடினின் கூட்டணி : அடித்து வீழ்த்தப்படுமா உக்ரைன் !

Ukraine World Russia
By Shalini Balachandran Jan 14, 2025 10:10 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இந்த வாரம் ஈரான் (Iran) ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை (Masoud Pezeshkian) சந்திக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையே சாத்தியமான ஆயுத வர்த்தகத்திற்கு அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடும் என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இரு தலைவர்களும் வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் சந்தித்து தங்கள் திட்டங்கள் மற்றும் கூட்டாண்மை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரபல நாடு !

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரபல நாடு !

இஸ்ரேலிய தாக்குதல்

இந்தப் பேச்சுவார்த்தையானது வர்த்தகம், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைனுக்கு எதிராக அபாயகரமான ட்ரோன்களை ரஷ்யாவுக்கு ஈரான் விநியோகம் செய்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் இருநாடுகளும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளன.

ஈரானுடனான புடினின் கூட்டணி : அடித்து வீழ்த்தப்படுமா உக்ரைன் ! | Vladimir Putin To Meet With Iranian President

தற்போது, ​​இஸ்ரேலிய (Israel) தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப ரஷ்ய ஆயுதங்களை ஈரான் நாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, சர்வதேச தடைகள் அதன் இராணுவ வலிமையை மட்டுப்படுத்தியுள்ளதால், ஈரான் தற்போது சுகோய் Su-35 போர் விமானங்களை வாங்குவதில் குறிப்பாக ஆர்வமாக உள்ளது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க புதையல் : எந்த நாட்டில் தெரியுமா !

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க புதையல் : எந்த நாட்டில் தெரியுமா !

உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனவரி 17 ஆம் திகதி, மாஸ்கோவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றே ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022 இல் உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் ஈரானும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. மட்டுமின்றி உள்கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படும் ஷாஹெத் ட்ரோன்களை ஈரான் வழங்குகிறது.

ஈரானுடனான புடினின் கூட்டணி : அடித்து வீழ்த்தப்படுமா உக்ரைன் ! | Vladimir Putin To Meet With Iranian President

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், எதிரிகளிடமிருந்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பைப் பாதுகாக்கும் வகையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் புடின் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னரே, வடகொரிய துருப்புகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறக்கப்பட்டது.

தற்போது ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் புடின், அந்த நாட்டு இராணுவத்தை உக்ரைனுக்கு எதிராக களமிறக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் : அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் : அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025