பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பம்!!
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Ranjith Siyambalapitiya
Sri Lanka Podujana Peramuna
By Kanna
பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்காக பதவி விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிந்தார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.