அடை மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka
By Beulah
அடை மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
பின்னணி
உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்