கொட்டும் மழையில் காவல்துறையினர் அதிரடி - மூவர் தப்பியோட்டம்
batticaloa
police
By Vanan
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் நேற்று (06) பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார (P.S.P.Bandara) தெரிவித்தார்.
கொக்கொட்டிச்சோலை சந்திமலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கசிப்பு உற்பத்தி நிலைய முற்றுகையின்போது 135000 மில்லி லீற்றர் கசிப்பு, 630000 மில்லி லீற்றர் கோடா மற்றும் இரு பரள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடாத்தி வந்த மூவர் தப்பியோடி விட்டதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி