தமிழினத்தின் துணிச்சலான குரல்: மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician
By Theepan Nov 10, 2026 05:49 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் மாமனிதர் நடராஜா ரவிராஜ்சின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால்இ அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜ் நினைவு சதுக்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் , அரசியல் பிரமுகர்கள் , செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்

இராணுவ அத்துமீறல்

பிரபல சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழினத்தின் துணிச்சலான குரல்: மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு | 20Th Commemoration Nadarajah Raviraj

2001-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராக தெரிவானார் தொடர்ந்து 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் காணாமல் போதல் மற்றும் இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்தார். சிவில் உரிமைகளுக்கான அமைப்புகளை உருவாக்கிப் பணியாற்றினார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். சிங்கள ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளையும் அமைதித் தீர்வின் அவசியத்தையும் சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கும் வகையில் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

அந்நிலையில் 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி , கொழும்பில் உள்ள தனியார் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றினை வழங்கி விட்டு , வீடு திரும்பிய பின்னர் மீண்டும் தனது வீட்டிலிருந்து வெளியேறியபோது, நாரேன்பிட்டிய பகுதியில் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழினத்தின் துணிச்சலான குரல்: மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு | 20Th Commemoration Nadarajah Raviraj

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், கொழும்பு கங்காராமப் பகுதியிலிருந்த கடற்படைப் புலனாய்வு அலுவலகத்தில் வைத்தே இக்கொலை திட்டமிடப்பட்டது என்றும், தாக்குதலுக்குப் பின் குற்றவாளிகள் அங்குதான் தப்பிச் சென்றனர் என்றும் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து, ஜூரி சபை ஒருமனதாகத் (Unanimous Verdict) கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

குறித்த தீர்ப்பினை எதிர்த்து,ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜும் சட்டமா அதிபரும் மேல்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026