போர்க்குற்ற விசாரணை: இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைதாகலாம்: சரத் வீரசேகர

Sri Lanka Army Sri Lankan Tamils Sarath Weerasekara
By Aadhithya Jun 15, 2024 05:35 AM GMT
Report

இலங்கை இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று செயற்படுத்தப்படுகின்றதாக சரத் வீரசேகர (Sarath Weerasekara) குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் இலங்கை இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்ற ஆபத்தான நிலைமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் அவரது தலைமையில் கூடியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


வெளியகப் பொறிமுறை

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 போர்க்குற்ற விசாரணை: இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைதாகலாம்: சரத் வீரசேகர | War Crimes Against Sl Army Sarath Veerasekhara

இவ்வாறு யுத்தக் குற்றம் இழைத்ததாக சாட்சி கிடைத்திருக்கும் இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏற்கனவே சில நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வெளியகப் பொறிமுறை வெளிவிவகார அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ள போதும், இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமையாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதிபர் தேர்தல் 2024:தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்

அதிபர் தேர்தல் 2024:தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்

வெளிவிவகார அமைச்சு

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம் அன்றி தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தமாக அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வெளியகப் பொறிமுறைக்கு வாய்ப்புக் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

போர்க்குற்ற விசாரணை

இந்த நடைமுறையானது இராணுவ வீரர்களின் சுயமரியாதைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், இவர்கள் மீது ஏனைய நாடுகள் போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படும் நாடுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எத்திருப்பதாவும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: ரணிலை குற்றம்சாட்டும் எம்.பி!

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: ரணிலை குற்றம்சாட்டும் எம்.பி!

நல்லிணக்க ஆணைக்குழு

குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தர்ஷன வீரசேகர இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், வலுவான தேசிய பொறிமுறையொன்று காணப்பட்டாலே வெளியகப் பொறிமுறையினால் சேகரிக்கப்படும் சாட்சிகளைத் தோற்கடிக்க முடியும் என்றும், இது தொடர்பில் எல்.எல்.ஆர்.சி அறிக்கை மற்றும் பரணகம அறிக்கையில் உள்ள விடயங்களை உள்ளடக்கியதாக தேசிய தகவல் கோப்புத் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

போர்க்குற்ற விசாரணை: இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைதாகலாம்: சரத் வீரசேகர | War Crimes Against Sl Army Sarath Veerasekhara

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்நாட்டுக்கு எதிராக செயற்படும் வெளியகப் பொறிமுறையை மேலும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமையும் என்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேக தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் வடக்கு-கிழக்குக்கு மாத்திரம் அல்ல! ஜீவன் எடுத்துரைப்பு

13 ஆவது திருத்தம் வடக்கு-கிழக்குக்கு மாத்திரம் அல்ல! ஜீவன் எடுத்துரைப்பு

சிந்தனை மாற்றங்கள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் அன்றையதினம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்களுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் இந்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதம் என்ற பதம் சரியாக அர்த்தப்படுத்தப்படவில்லையென்றும் பல பயிற்சிகளின் விளைவாக பயங்கரவாதியொன்று உருவாவதால், இந்தப் பயிற்சிகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் ஆரம்பிக்கும்போது போது பயங்கரவாதியைப் பிடிப்பதற்கு எந்த முறையும் இல்லை என்பது தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025