போரால் பாதிக்கப்பட்ட வட மாகாணம் : அதிக வளங்களுடன் காணப்படுவதாக எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டு
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் அதிகளவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காணப்படுவதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பசுமை ஐதரசன் மற்றும் அம்மோனியாவுக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணம்
இலங்கையில் இடம்பெற்ற போரினால் வடக்கு மாகாணம் பாரியவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Northern Sri Lanka ?? is beautiful and suffered a lot through the war.
— Erik Solheim (@ErikSolheim) January 8, 2024
Now Northern Province creates ample opportunities for renewable energy production, as well as Green Hydrogen and Green Ammonia. @RW_UNP @SriLankaTweet
pic.twitter.com/rQQU2Dr32L
இந்த நிலையில், தற்போது வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய பிரச்சினை
இதேவேளை, இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படுவதாக கூறப்படும் கூற்றை எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |