நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் முன்னாள் எம்.பி
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், மக்கள் கோரிக்கைகளுக்கேற்ற புதிய உறுப்பினர்களுடனான நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
தனது பதவி விலகலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சமிந்த விஜேசிறி இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரவேசம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனது தந்தைக்காக நான் அரசியலுக்குள் வந்தேன்.
எனது சேவைக்காலத்தில் மக்களுக்காக செய்ய முடியுமான அனைத்தையும் சரிவர செய்தேன்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் தொடர்பில் நாளாந்த பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சபிக்கப்படும் எம்.பிக்கள்
எமது பிள்ளைகளையும் சேர்த்து இலங்கையர்கள் சபிக்கிறார்கள்.
இது தவறான முறையில் நடக்காத அரசியல்வாதிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி.
புதிய நாடாளுமன்றம்
இந்த நிலையில், இலங்கையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு புதியதொரு நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
எனது பதவி விலகல் இந்த நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில் அமையுமென எதிர்பார்க்கிறேன்.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் ஊழல்வாதிகளை தவிர்த்து, சட்டத்துக்குட்பட்டு நடக்கும் சிலரும் இருக்கிறார்கள்.
இலங்கையின் சட்ட திட்டங்கள்
இதனை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் சட்ட திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல், மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |