நாட்டின் 6 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 2 நிலையங்கள் : டீ.பி. ஹேரத்

Sri Lanka Sri Lankan Peoples France
By Beulah Jan 09, 2024 02:45 PM GMT
Report

தற்போதுள்ள 6 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு உற்பத்தி நிலையங்களைத் திறப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்துரைக்கையில்,

தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்

தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்

உள்நாட்டு உற்பத்தி

“நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்தியில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. தேசிய தேவையில் 40% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டின் 6 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 2 நிலையங்கள் : டீ.பி. ஹேரத் | 2 More In Addition To 6 Dairies In Sri Lanka

எஞ்சிய 60% இறக்குமதி செய்வதற்கு 34 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. ஆண்டுக்கு 750 மில்லியன் லீற்றர் பால் தேவைப்பட்டாலும், 350 மில்லியன் லீற்றர் மாத்திரமே உற்பத்தி செய்கிறோம்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, பால் உற்பத்திக்கு சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பால் ஊக்குவிப்பு திட்டம்

மேலும், பால் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நாட்டின் ஆதரவுடன் 06 பால் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வாரியபொல, வென்னப்புவ, அத்தனகல்ல, கொழும்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 6 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 2 நிலையங்கள் : டீ.பி. ஹேரத் | 2 More In Addition To 6 Dairies In Sri Lanka

மேலும் அண்மையில் நாவலப்பிட்டியில் இவ்வாறான பால் உற்பத்தி நிலையம் ஒன்று திறக்கப்பட்டது.

இத்தொழிற்சாலைக்கு தேவையான பால் பதப்படுத்தும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் 600 இலட்சம் ரூபா உதவி வழங்க இருக்கிறது.

இதற்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணங்களுக்காக நாவலப்பிட்டி பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 60 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 5000 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உதவுமாறு பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எமது அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

வரவு செலவு திட்டம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபாவை பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளார்.

நாட்டின் 6 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 2 நிலையங்கள் : டீ.பி. ஹேரத் | 2 More In Addition To 6 Dairies In Sri Lanka

குறிப்பாக ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் கால்நடை தீவனத்தை வரிச்சலுகையுடன் பண்ணையாளர்களுக்கு நியாயமான விலையில் வழங்க கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.” என்றார். 

சிங்களவர்கள் மாத்திரமா இலங்கையர்கள்.! நீதி அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் மாத்திரமா இலங்கையர்கள்.! நீதி அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கஜேந்திரகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024