தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Tamils
By Shadhu Shanker Mar 27, 2024 10:32 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் இளைஞர்கள் அரச பாதுகாப்புப் படையினரால் பின்தொடரப்படுவதால் அவர்களது பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு  வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் விசாரணைப் பிரிவு

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (வயது 32) என்பவரை குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம் | War Tamil Youths Being Followed Security Forces

இந்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை காவல்துறையினர் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த இளைஞனின் பெற்றோர், அதில் எழுதப்பட்டிருந்த விடயம் தமக்கு புரியவில்லை எனவும், அதனால் கடிதத்தை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் காவல்துறையினர் தமது வீட்டிற்கு வந்து மகனைப் பற்றி விசாரித்ததாக தெரிவித்த பெற்றோர்கள், 2018 ஆம் ஆண்டு முதல் தமது பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக வெளிநாட்டில் இருக்கும் தமது பிள்ளையை குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கின்றமையால், அவரது பாதுகாப்பு குறித்தது அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் பிரதேச ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தல்

இதேவேளை பதினாறு வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு இராணுவத்தினர் சென்றதாகவும், இதனால் அவரது உறவினர்களும் அச்சமடைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம் | War Tamil Youths Being Followed Security Forces

மன்னார் பகுதியைச் சேர்ந்த உயிர் மாறன் எனப்படும் சகாயநாதன் சந்தியாப்பு 2004ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சந்தியாப்புவிள் உறவினர் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் இவரைப் பற்றிய தகவல்களை திரட்டியதால் அவரது உறவினர்களும் அச்சமடைந்துள்ளதாகவும், சந்தியாப்பு இலங்கை அரசாங்கத்தின் கீழ் புனர்வாழ்வு பெறாதவர் எனவும் பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீதி நடைமுறைகள் இல்லாத சிறை தண்டனை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது இராணுவ ஆட்சியின் கீழ் அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டம் நடத்தப்பட்ட முகாம்களில் பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான நம்பகமான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு

சுட்டுக்கொலை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு

முன்னாள் போராளிகள் 

குற்றவியல் விசாரணைப் பிரிவு அழைப்புகள் தொடர்கின்றன இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினருமான அரவிந்தன் எனப்படும் செல்வநாயகம் ஆனந்தவர்ணனை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம் | War Tamil Youths Being Followed Security Forces

அவரது முகப்புத்தக கணக்கு குறித்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக மார்ச் 12ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மார்ச் 9ஆம் திகதி அவருக்கு அறிவிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகப்புத்தக கணக்கு குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் மார்ச் 12ஆம் திகதி முன்னிலையாகுமாறு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்தன் என அறியப்படும் ஆனந்தவர்ணனுக்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா பிரிவிற்குப் பொறுப்பான, பிரதான காவல்துறை பரிசோதகர் எச்.ஏ.யூ.எஸ்.கே. ஹேவாவசம்மின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் கையளிக்ககப்பட்டுள்ளது.

விசாரணை

குறித்த கடிதத்தில் மார்ச் 12ஆம் திகதி கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள பூட்டாணி கெப்பிடல் கட்டடத்தில், விசாரணைப் பிரிவு 1இன், நிலையப்பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம் | War Tamil Youths Being Followed Security Forces

எனினும் தனக்கு இருந்த வேலைப்பலு காரணமாக விசாரணைக்கு முன்னிலையாக முடியாமை குறித்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அறிவித்ததோடு, தான் இதுவரை விசாரணைக்காக செல்லவில்லை என்பதை அரவிந்தன் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலராக கடமையாற்றும் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு விசாரணைக்கு என அழைத்திருந்தது.

மார்ச் 15ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு  காவல்துறை தலைமையத்தினால் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக, அரச ஊழியரும், சுயாதீன ஊடகவியலாளருமான திருச்செல்வம் திவாகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

குறித்த கடிதத்தில் மார்ச் 15ஆம் திகதி கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள பூட்டாணி கெப்பிடல் கட்டிடத்தில் பரிசோதனையை முன்னெடுக்கும் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி..! உறவினர்கள் அச்சம் | War Tamil Youths Being Followed Security Forces

எனினும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறெனினும் காரணத்தை அறிவதற்காக திவாகர், முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரையும் சந்தித்து கேட்டபோதும் அவர்களும் காரணம் தெரியாது என பதிலளித்துள்ளனர்.

பின்னர் கடந்த 15ஆம் திகதி திருச்செல்வம் திவாகர் விசாரணைக்காக முன்னிலையாானதோடு, இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தகவல் அளித்ததாக உறுதிப்படுத்தினார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024