கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்சரிக்கை தகவல்
Weather
By Vanan
தற்போது நிலவும் வெப்பம் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களது உடலில் நீரிழப்பு ஏற்படக்கூடும் காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம்.
முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்
கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.
நீங்கள் வழக்கமாக 2 லீட்டர் தண்ணீர் குடித்தால், சுமார் 3 முதல் 4 லீட்டர் தண்ணீர் குடியுங்கள்” - என்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி