யாழில் கட்டாக்காலி மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை!
யாழ்ப்பாணம்(Jaffna) உட்பட வட மாகாணத்தில் உள்ள கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி மாடுகளை நடமாடவிடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை
இதன் காரணமாக இன்று(07) முதல் ஒரு வாரத்திற்கு வட மாகாணம் முழுவதும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த எச்சரிக்கை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
you may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |