கனடா - டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேற்கு கனடாவில் நூற்றுக்கணக்கான காட்டுத்தீயின் புகை கிழக்கு நோக்கி பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது டொராண்டோ போன்ற முக்கிய கனேடிய நகரங்களிலும், அமெரிக்காவின் மேல் மத்திய மேற்குப் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டை அபாயகரமான அளவிற்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் திங்கட்கிழமை மேகமூட்டமான வானம் நிலவுவதாகவும், மேலும் சுற்றுச்சூழல் கனடாவின் அதிகாரிகள் காற்றின் தர எச்சரிக்கையை வெளியிட்டனர்.
கண்காணிப்பு தளம்
உலகளாவிய காற்று கண்காணிப்பு தளமான IQAir இன் கூற்றின்படி, திங்கட்கிழமை பிற்பகல் டொராண்டோவின் காற்றின் தரம் உலகெங்கிலும் மிக மோசமான இடங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும், டொராண்டோ மற்றும் ஒன்ராறியோவின் பிற பகுதிகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கனடா குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில், கிரேட் லேக்ஸ் பகுதியிலும் காற்றின் தரம் குறைந்துள்ளது, குறிப்பாக வடக்கு மினசோட்டா மற்றும் விஸ்கான்சின், மேற்கு நியூயார்க் மற்றும் வடக்கு பென்சில்வேனியாவில் இந்த நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

