ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு காலக்கெடு! உடல்கள் மட்டுமே நாடு திரும்பும் என எச்சரிக்கை
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
செப்டம்பர் 30-ஆம் திகதி பிறகும் அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தங்கியிருந்தால், அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
இதன்படி, தொடர்ந்து அங்கு தங்கியிருந்தால் அவர்களின் உடல்கள் மட்டுமே ஈராக்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் என அல்-காபி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆயுத இயக்கங்களின் கூட்டணி
12-வது படைப்பிரிவு என்றும் அழைக்கப்படும் இந்த அமைப்பு, ஈரானுக்கு நெருக்கமான ஆயுத இயக்கங்களின் கூட்டணியான, ஈராக்கை தளமாகக் கொண்ட மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு இந்த அமைப்பையும் இதன் தலைவர் அக்ரம் அல்-காபியையும் பயங்கரவாதிகள் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18