கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
Toronto
Canada
World
By Laksi
கனடாவின் (Canada) -ரொறன்ரோவில் (Toronto) உயிராபத்தை ஏற்படுத்தும் பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் புதிய பக்றீரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 13 பேர் இனங் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணங்கள் பதிவு
இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் இந்த நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்