ஈ - சிகரெட்டுக்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈ - சிகரெட்டுக்கள் என்ற இலத்திரனியல் புகையிலை பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் ஈ - சிகரெட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் அந்த சபை கோரியுள்ளது.
இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஈ - சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஈ - சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டன
குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீனரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட ஈ - சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில காலமாக இணையத்தளம் ஊடாக குறித்த நபர் இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஈ - சிகரெட்டுக்கள் அதிகம் விரும்பப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |