பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவி்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு
எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழையுடனான வானிலை அவ்வப்போது தொடரும் என தெரிவிக்கப்பட்டு்ளளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |