வேகமெடுக்கும் காய்ச்சல் - சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
அதிக மழையுடனான வானிலை போன்ற சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரை 2500 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை காலி, மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 19 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 229 பேர் எலிக்காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
எலிக்காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்