மரியாதையுடன் பேசுங்கள்: சபையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் - அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கை
By Dharu
சபையில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தால் நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை சபாநாயகர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயகர்,
''யாரையும் தனிப்பட்ட ரீதியில் மோசமான வார்த்தையை பயன்படுத்தி கருத்து தெரிவிக்க வேண்டாம். சில நாட்களாக சபையில் மோசமான கருத்துக்களை நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள்.
இது சபைக்கு பொருத்தமானது அல்ல. ஒழுக்கத்தை மீறி செயல்படுகிறீர்கள். நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுகிறீர்கள். சிறந்த ஒரு உறுப்பினராக நடந்துகொள்ளுங்கள்.''என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்