சட்டவிரோத மதுபான சோதனைக்கு சென்ற காவல்துறையினருக்கு நேர்ந்த கதி : மூவர் கவலைக்கிடம்
கொத்மலை, வெதமுல்ல, ரம்பொட பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான ஆலை மீது சோதனைக்குச் சென்ற கொத்மலை காவல்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மீது இன்று (01) குளவிகள் கடுமையாகக் கொட்டியுள்ளன.
வனப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து குளவிகள் கொட்டியதில் கொத்மலை காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் கடுமையாகக் காயமடைந்தனர்.
வனப்பகுதிக்கு அருகே கொண்டுவரப்பட்ட அம்புலன்ஸ்கள்
பின்னர், இரண்டு 1990 சுவசேரி அம்புலன்ஸ்கள் வனப்பகுதிக்கு அருகே கொண்டுவரப்பட்டு, காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் கொத்மலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் பின்னர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று பேரின் நிலை கவலைக்கிடம்
காவல்துறை அதிகாரிகளில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்