மக்களுக்கு மற்றுமொரு பேரிடி - அதிகரிக்கப்படவுள்ள நீர் கட்டணம்

Parliament of Sri Lanka Ceylon Electricity Board Water Board
By Kathirpriya Jul 21, 2023 12:18 PM GMT
Report

சிறிலங்காவில் நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் நேற்று முன்தினம் (19) கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் நீர் விநியோக நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டே குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று முன்தினம் (19) நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் எட்டப்பட்டது

மக்களுக்கு மற்றுமொரு பேரிடி - அதிகரிக்கப்படவுள்ள நீர் கட்டணம் | Water Bill Increasing Srilanka Decision Parliament

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எதிநோக்குகின்ற முக்கியமானபிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தரமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

இவை தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீர்க்கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நீர் கட்டண அதிகரிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் எழுந்த கேள்விகளிற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுகிறது

மக்களுக்கு மற்றுமொரு பேரிடி - அதிகரிக்கப்படவுள்ள நீர் கட்டணம் | Water Bill Increasing Srilanka Decision Parliament 

மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமையின் காரணத்தால் நீர் உற்பத்திக்கான செலவு அதிகரித்து மாதாந்தம் 500 மில்லியன் ரூபாய் நட்டம் அரசாங்கத்திற்கு ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாமல் கடன் சுமை, நாணயத் தேய்மானம், வட்டிவீதம் அதிகரித்துள்ளமை, நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்தமை போன்ற காரணங்களால் மாதாந்தம் சுமார் 2.8 பில்லியன் ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு சிறிலங்கா அரசினால் வழங்கப்படும் இணக்கப்பாடு மற்றும் நிலையான அபிவிருத்தியின் நிமிர்த்தமாக எமது முயற்சியினால் புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கை ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொருளாதார சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் நீர் விநியோகத்தை பாதுகாப்பதற்கு இது அவசியமான ஒரு முடிவு என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமுர்த்தி மற்றும் குடியிருப்பு நீர் பாவனையாளர்கள் குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியுடன் கூடிய மக்களுக்களுக்கான நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது.

பொருளாதார தாக்கம் ஏற்பட மாட்டாது

மக்களுக்கு மற்றுமொரு பேரிடி - அதிகரிக்கப்படவுள்ள நீர் கட்டணம் | Water Bill Increasing Srilanka Decision Parliament 

அவர்களுக்கான மானியங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்பதனால் மேலதிக பொருளாதார தாக்கம் ஏற்படமாட்டாது.

அது மாத்திரமன்றி முன்மொழியப்பட்டுள்ள நீர் கட்டணத்தை அதிகரிக்குமிடத்து குறைந்தளவு நீரைப் பயன்படுத்தும் நீர் பாவனையாளர்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாதாந்தம் குறைந்தளவு நீர் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களின் கட்டணம் 1000 ரூபாவிற்கு குறைவாகக் (நாளொன்றுக்கு 33 ரூபா) காணப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டதுடன். இவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026