மக்களுக்கு அடுத்த பேரிடி - மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்
குடிநீர் கட்டணத்தை மீண்டும் திருத்தியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, நீர் வழங்கல் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவிடம் அதிகாரிகள் யோசனையை முன்வைத்தனர்.
இதன்படி தற்போது, ஒரு லீற்றர் நீர் சுமார் 2 ரூபாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் அண்மையில் 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் நீரை பதப்படுத்துவதற்கு சுமார் 12 -14 ரூபாவரை செலவாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும்
இதனால் விலைக்கு ஏற்ற வகையில் குடிநீர் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நீர் வழங்கல் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியிருந்தது.
அண்மைக்காலமாக நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், நீர் விநியோகச் செலவு முன்னைய தொகையை விட 50% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தற்போதைய குடிநீர் கட்டணம், செலவை ஒப்பிடும் போது போதுமானதாக இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீர் கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் கவனம்
வயோதிபர்கள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறுபவர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கான நீர் கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் குடிதண்ணீர் போத்தல்களுக்கு அரசாங்கம் வரி அறவிடுவது தொடர்பிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நீர் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அண்மையில் குடிநீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
