மகிந்தவின் விஜேராம இல்ல நீர் விநியோக துண்டிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டாதாக கூறும் செய்திகள் தவறானவை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட நீர் வழங்கல் சபை, முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
எனினும், மகிந்தவின் வீட்டிற்கு அருகில் உள்ள முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் வசித்து வந்த பகுதியொன்றில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
2024 ஒக்டொபரில் பணியாளர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், இதற்கான கட்டணங்களை ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செலுத்தப்படாத நீர் கட்டணங்களில் சுமார் ரூ. 429,000 நிலுவைத் தொகை உள்ளதாகவும், அதனை செலுத்துமாறு செயலகத்திற்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பாதுகாப்புப் படையினர் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டணங்கள்
எனினும், மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)