எரிபொருளில் கலப்படம் - கையும் மெய்யுமாக பிடிபட்ட பவுசர் - மக்களே அவதானம்(video)
நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் எரிபொருட்களில் நீர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாரம்மலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் தொடர்பில் நிர்வாகத்தினர் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்த மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பௌசரில் இதற்கு முன்னர் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெற்றோலின் தரம் குறித்து ஆராய்வதற்காக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குருநாகல் பிராந்திய உத்தியோகத்தர்கள் குருநாகல், நாரம்மல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட் செய்துள்ளார்.
Narammala Ceypetco… The bowser which was sent with Petrol, mixed with water, which was asked not to unload. @kanchana_wij for your attention.. pic.twitter.com/862tXot2KT
— Jay.Tissera (@JanithTissera) May 5, 2022

