நீர் கட்டணம் செலுத்தாதோருக்கு முக்கிய அறிவிப்பு!
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களை வசூலிப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (13) முதல் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று (13) முதல் 19 ஆம் திகதி வரையிலான காலம் “நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு நடவடிக்கை முக்கியமாகப் பல பகுதிகளைக் குறிவைத்துச் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துண்டிக்கப்படும் பகுதிகள்
அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்துப் பகுதிகள், மஹாரகம பிரிவு மற்றும் கோட்டை பிரிவிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பேணுவதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களின் நிலுவைக் கட்டணங்களை 2026, ஜூலை 13 ஆம் திகதி முன்னர் செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |