நாங்கள் சஜித் தரப்பின் அடிமைகள் அல்ல! ரிஷாத் பதியுதீன் காட்டம்
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் கட்சி, நாங்கள் அந்தக் கூட்டணியில் பங்குதாரர்கள் மட்டுமே," என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்துள்ளார்.
குருநாகலையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் இது தொடர்பில் உரையாற்றிய அவர்,
''எதிர்க்கட்சியின் தற்போதைய அரசியல் பாதை குறித்துத் தாம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளேன்.
நாடாளுமன்றப் பதவிகள்
அரசியல் கூட்டணி கட்டப்பட்ட கோட்பாடுகளிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகக் கூடாது என்றும் அறிவிருத்தியுள்ளேன்.

இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காகத் தமது கட்சியின் ஆதரவாளர்கள் பல மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டு, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.
குறிப்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், நாடாளுமன்றப் பதவிகள் மற்றும் அமைச்சுப் பதவிகள் ஆகியவை கட்சிகளுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டன.
அடிப்படைக் கோட்பாடு
எனினும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி தற்போது விலகி செல்கிறது.

இந்தச் செயற்பாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தேன்.
நாங்கள் அவருடன் இணைந்து நின்றது அவருடைய கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளுக்காகத்தான்.
எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தாலும், அந்தக் கொள்கைகளைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |