பதவியேற்க தயார்! எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தேசத் துரோகம்: சஜித் வலியுறுத்தல்
Sajith Premadasa
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
முடிந்துவிட்ட மக்கள் ஆணை
அழிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும் அவர்கள் இந்த அழகிய தேசத்தை அழித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டை ஸ்திரப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், அரச தலைவர் மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதற்கு தாம் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசத் துரோகசெயல்
இச்செயற்பாட்டிற்கு எதிராக யாராவது நாடாளுமன்றத்தில் சதிகளை மேற்கொண்டால் அது தேசத்துரோக செயல் எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் தனக்கு ஒத்துழைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
