இலங்கை தொடர்பில் அமெரிக்க அரச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
Joe Biden
Ranil Wickremesinghe
Sri Lanka
United States of America
By Sumithiran
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்பு
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியில் ரணில்
இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் ரணில் கூறினார்.
இதற்காக அமெரிக்கஅரச தலைவர் ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

