பேரினவாத குழுக்களால் சகோதரரை இழந்துள்ளோம்! பிரியந்தவின் சகோதரர் உருக்கம் (VIDEO)
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
பேரினவாத குழுக்களால் சகோதரரை இழந்துள்ளோம்.வேலை நிறுத்த போராட்டமொன்றின் போதே எனது சகோதரர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் உயிரிழந்த பிரியந்தவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் முகாமையாளராக அவர் தீர்மானமொன்றினை எடுக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்துள்ளார்.இருப்பினும் எனது சகோதரர் இரக்கமின்றி கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளார் என்றும் தனது உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் யூஎல் 186 விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்