அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம்

By Thulsi Jul 04, 2026 02:58 AM GMT
Report

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தொடங்கியிருக்கின்றன.

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததுடன், இந்தத் தாக்குதலில் கமேனியுடன் சேர்த்து அவருடைய மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதமே ஆன அவரது பேத்தி ஜஹ்ரா முகமது கோல்பயேகானி ஆகியோரும் பலியாயினர்.

இவர்களது உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸின் கண்ணிவெடி வேட்டை கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸின் கண்ணிவெடி வேட்டை கப்பல்கள்!

உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது

பொதுவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி உடலை ரசாயனங்கள் தடவி பதப்படுத்துவது (Chemical Embalming) தடை செய்யப்பட்டுள்ளது.

அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம் | Iran Supreme Leader Funeral Body Preserved

அப்படியிருக்க கமேனியின் உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பது பெரும் பேசுபொருளாக இருக்கிறது.

இது குறித்து வைத்தியர் முகமது உமர் விளக்குகையில், "போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன.

இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

நாடுகளின் பட்டியல்

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம் | Iran Supreme Leader Funeral Body Preserved

இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த பட்டியலில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா, துருக்கி, துர்க்மெனிஸ்தான்,   தஜிகிஸ்தான், ஈராக், ஜோர்ஜியா, அர்மேனியா, ஆப்கானிஸ்தான், ஓமான், கத்தார், அசர்பைஜான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, கசகஸ்தான், கானா, நிகரகுவா, கொங்கோ, செர்பியா, துனிசியா, லெபனான், நமீபியா, மலேசியா, கியூபா, இலங்கை, மியான்மர், காம்பியா, தாய்லாந்து ஆகிய நாடுள் உள்ளடக்கப்பட்டுள்ளன

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026