டீசல் கட்டணம் உயர்த்தப்பட்டால்..! பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவோம் - கூட்டாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது டீசல் கட்டணத்தை உயர்த்தினால் பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது பேருந்துக்களுக்கான எரிபொருளை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன (IOC) எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹெமுனு விஜேரதே (Gemunu Wijerathe) மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அஞ்சனா ப்ரியஞ்சித் (Anjana Priyanjith) ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொது மக்கள் தேவைக்கு அதிகமான டீசல்களை எரிபொருள் நிலையங்களில் பெற்று கொள்ளவேண்டாம் என்றும் இலங்கை போக்குவரத்து சபை கேட்டுக்கொண்டுள்ளது.
டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரிப்போம் என்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சனா ப்ரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
