மக்களின் எதிர்ப்பை மீறி கழிவு கொட்ட மாட்டோம் - பருத்தித்துறை தவிசாளர் உறுதி
மக்களின் எதிர்ப்பை மீறி கழிவு கொட்ட மாட்டோம் என பருத்தித்துறை நகரபிதா உறுதியளித்துள்ளார்.
பருத்தித்துறை நகரசபை பருத்தித் துறை பிரதேச சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதற்காக 7:5 ஏக்கர் வயல் காணியை பல ஆண்டுகளுக்கு முன்னர் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கொள்வனவு செய்துள்ளது. குறித்த காணியை சூழ வயல் நிலங்களாகும்.
குறித்த பகுதியில் கழிவு கொட்டுவதால் தமது விவசாய நிலங்கள் பாதிக்க படுவதாகவும், சூழல் மாசுபடும் என்பதாலும் குறித்த நகர சபை காணியில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று குடத்தனை கிராம மாட்ட பொது அமைப்புக்கள் நகரசபை தவிசாளர் உட்பட நகரசபை உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
நேற்றைய தினம் பருத்தித்துறை தவிசாளர் உட்பட நகரசபை உறுப்பினர்கள் குறித்த காணியை பார்வையிட சென்றபோதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பருத்தித்துறை தவிசாளர் மக்களின் எதிர்ப்பை மீறி தாம் குறித்த காணியில் கழிவு கொட்ட மாடடோம் என உறுதியளித்துள்ளார்.
இது விடயமாக கருத்து தெரிவித்த குடத்தனை சமூக மட்ட அமைப்புக்கள் முன்னர் நகரசபை செயலாளராக இருந்தவர் குறித்த காணியில் கழிவு கொட்ட மாட்டோம் என கடிதம் மூலம் உறுதியளித்துள்ள போதும் மக்கள் சபை வரும் முன்னர் தற்போதய செயலாளர் குறித்த காணியில் கழிவுகளை கொட்டி அதனை தீயிட்டு எரித்ததாக்கவும், உக்காத பிளாஸ்டிக் கழிவுகளை குறித்த காணியில் புதைதைத்துள்ளதாகவும் இதனால் சூழல் மாசு நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |