ஈரானின் மீது உக்ரைன் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை..!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
Iran
By Pakirathan
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்திற்கு ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதங்களை ஈரான் விநியோகம் செய்து வருகின்றது.
இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது.
இந்தநிலையில், ஈரானுக்கு எதிராக உக்ரைன் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.
பொருளாதாரத் தடை
இந்த சட்டமூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது.
மேலும், உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில் நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கவும் வழிவகை செய்கிறது.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி